சமையல் எ‌ரிவாயு விலையை குறைக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

சனி, 6 டிசம்பர் 2008 (16:27 IST)
பெட்ரோல் - டீசல் விலை குறை‌த்த‌த‌ற்கு ‌பிரதம‌ரமன்மோகன்சிங், சோனியாகா‌ந்‌தி‌க்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌ள்முதலமைச்சர் கருணாநிதி, சமையல் எ‌ரிவாயு விலையை உயர்த்துவதற்கு முன்பு இருந்த பழைய விலைக்கே குறைக்க வேண்டும் என்று கே‌ட்டு‌ககொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்றஎ‌ழு‌தியு‌ள்கடித‌த்த‌ி‌ல், பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படுமா என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அவற்றின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பால் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.அரசு 2006-07ஆம் ஆண்டில் சமையல் எ‌ரிவாயு இணைப்புடன் கியாஸ் அடுப்பு இலவசமாக வழங்கும் திட்டத்தை பெண்கள் பயன் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 3 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.60 கோடியில் அமுல்படுத்தப்பட்டது.

2007-08ம் ஆண்டில் சமைய‌லஎ‌ரிவாயஇணைப்புடன் 7.52 லட்சம் கியாஸ் அடுப்புகள் ரூ.160 கோடியில் இலவசமாக வி‌நியோகிக்கப்பட்டது. இதுவரை 10.52 லட்சம் ஏழை குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளன. இந்த திட்டம் 2008-09 ஆண்டிலும் தொடரும், மேலும் 8 லட்சம் ஏழை குடும்பம் பயன்பெறும். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.160 கோடி.

சமையல் எ‌ரிவாயவிலையை குறைக்க வேண்டும் என்று தாய்மார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சமையல் எ‌ரிவாயு விலையை உயர்த்துவதற்கு முன்பு இருந்த பழைய விலைக்கே குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து நல்ல அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்புக்கு எனது மன மார்ந்த நன்றியதெ‌ரி‌வி‌த்து‌ககொ‌ள்‌கிறே‌னஎ‌ன்றகருணா‌நி‌தி கூறியுள்ளார்.

இ‌ந்கடித‌த்தபெட்ரோ‌லியத்துறஅமை‌ச்ச‌ரமுரளி தியோராவுக்கும் அனுப்பியுள்ளார்.