ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் மூடுபனி

சனி, 6 டிசம்பர் 2008 (11:24 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மூடுபனி நிலவுகிறது. இதனால் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். கடந்த பத்து நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் கடும் மூடுபனி ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த மாவட்டத்தில் தற்போது பயிரிட்டுள்ள சுமார் பத்து லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் பாதித்தது. புதுவகையான நோய் தாக்குதலும் ஏற்பட்டது.

கடந்த ஐந்து நாட்களாக கடும் வெப்பன் வீசியது. இதன் காரணமாக நெற்பயிர்கள் மீண்டும் நோய் தாக்குதலில் இருந்து மீண்டு செழிப்பாக காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்