இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கடலூரை சேர்ந்த மீனவர்கள் கதிரவன், பன்னீர், ராஜா, சுப்பிரமணியன், நாகையை சேர்ந்த குமார், தமிழ்மணி, திருமுருகன், ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த சக்திவேல், கார்த்திக், சீனி, மனோஜ் உள்பட 21 மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே மத்திய, தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் 21 மீனவர்களையும் சிறிலங்க அரசு விடுதலை செய்தது. விடுதலையான 21 மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் நேற்று அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலை 21 மீனவர்களும் மண்டபம் வந்தனர். அவர்களிடம் க்யூ பிராஞ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.