சென்னை திரும்பினர் அனைத்துக் கட்சி தலைவர்கள்
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:44 IST)
இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு சென்னை திரும்பினர்.
முதலமைச்சர் கருணாநிதி, தனி விமானம் மூலம் இரவு 11 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி, சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் வரவேற்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கோ.க. மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் உள்ளிட்டவர்கள் சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இலங்கை பிரச்னையை ஐ.நா. அமைப்பிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமரை தான் கேட்டுக் கொண்டதாகக் தெரிவித்தார்.