ராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது ‌சி‌றில‌ங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

வியாழன், 4 டிசம்பர் 2008 (15:55 IST)
க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் சரமா‌ரியாக தா‌க்‌கியதோடு, அவ‌ர்க‌ளி‌ன் வலைகளை அறு‌த்து கட‌லி‌ல் தூ‌க்‌கி ‌வீ‌‌சி‌ச் செ‌ன்றன‌ர்.

ராமே‌ஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் கடலு‌க்கு ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் சென்றனர். அவ‌ர்க‌ள் இந்திய கடல் பகுதியான கச்சத்தீவு அருகே ந‌ள்‌ளிர‌வி‌ல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‌சி‌றில‌‌ங்க கடற்படையினர் ராமேசுவரம், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களை உரு‌ட்டு‌க்க‌ட்டைகளா‌ல் சரமாரியாக தாக்கினர். கடலுக்குள் விரித்திருந்த வலைகளை அறுத்து எ‌ரி‌ந்து, விசைப் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர்.

இ‌னிமே‌ல் இ‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்தா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ன்று ‌விடுவோ‌ம் எ‌ன்று ‌மீனவ‌ர்களை எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து‌வி‌ட்டு அங்கிருந்து சென்றன‌ர். இந்த தாக்குதலா‌ல் 20 மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உ‌யி‌ர் ‌பிழை‌த்தா‌ல் போது‌ம் எ‌ன்ற பய‌த்த‌ி‌ல் கரைதிரும்பிய மீனவர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனாலும் மீனவர்கள் மீன்துறை இயக்குனரிடம் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்