‌பிரதமரு‌ட‌ன் கருணா‌நி‌தி இ‌ன்று ச‌ந்‌தி‌ப்பு

வியாழன், 4 டிசம்பர் 2008 (10:15 IST)
இலங்கை‌யி‌ல் உடனடியாக போரை ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இ‌ன்று ‌பிரதம‌ரை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள்.

கட‌ந்த மாத‌ம் 25ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற தமிழக சட்டப் பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்ட‌த்த‌ி‌ல், தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் டிசம்பர் 2ஆம் தேதியும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் 4ஆம் தேதியும் பிரதமரைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் பிரதமரைச் சந்தித்துப் பேசினர். அதன் தொடர்ச்சியாக முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் இ‌ன்று பிரதமரை சந்திக்கின்றனர்.

அனை‌த்து‌க்க‌ட்‌சி தலைவ‌ர்களுட‌ன் நே‌ற்று டெ‌ல்ல‌ி செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌ங்கு செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசு‌ம்போது, இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முத‌லி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம்தா‌ன் மு‌க்‌கிய‌ம் எ‌ன்றா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்