வேதாரண்யம் அடுத்த ஆதனூரில் உள்ள மானாங்கொண்டான் ஆற்று பாலத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் பயணம் செய்த குடவாபுலம் கிராமத்தை சேர்ந்த சின்னம்மா (65), ஊராட்சிமன்ற உறுப்பினர் தனபால் ஆகியோர் மூச்சுதிணறி பலியானார்கள்.
பலியான ஊராட்சிமன்ற உறுப்பினர் தனபாலுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனபால் வெள்ளத்தில் சிக்கி பலியான தகவல் அவரது மனைவி கலாவுக்கு (25) தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலா, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலா உயிரிழந்தார்.