சாரு பள்ளி‌ ஆய்வு கட்டுரை மாநில அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:20 IST)
ஈரோடு : சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல் ஆய்வு‌க் கட்டுரை மாநில அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு பெற்றுள்ளது.

webdunia photoWD
ஈரோடு மாவட்ட 16-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னிமலை நாச்சிமுத்து ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் 81 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 200க்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகளை சமர்பித்து ஆய்வறிக்கை அளித்தனர்.

இதில் புவிக்கோள் என்ற தலைப்பை மையமாக கொண்டு நடைமுறையிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வைக் கொண்ட ஆய்வறிக்கைகள் இடம்பெற்றது.

இதில் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சையத் சல்மான்கான் தலைமையிலான ஆய்வு அணியினர் 'வளி ஆற்றலை பயன்படுத்தி மின்பற்றாக்குறையை சரிசெய்தல்' என்ற தலைப்பில் சமர்பித்த ஆய்வு‌க் கட்டுரை மாநில அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான கேடயத்தை கோவை அண்ணா பல்கலை‌க் கழக துணைவேந்தர் டாக்டர் ராதகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், கல்லூ‌ரியின் தாளாளர் சுத்தானந்தன், குழந்தைகள், அறிவியல் மன்றத்தின் மாநில செயலாளர் பேராசிரியர் மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் மற்றும் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் சாமியப்பன், முதல்வர் ருக்குமணிசாமியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.