திருவண்ணாமலையில் 6 செ.மீ மழை
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக கடலூர் மாவட்டம் லக்கூர், தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, செங்கம், அரியலூர் மாவட்டம் திருமனூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கரையூர், தர்மபுரி மாவட்டம் ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், அரியலூர், தேனி மாவட்டம் மஞ்சலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், பள்ளந்துறை, புவனகிரி, மேமத்தூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளூந்தூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் கீழணை, திருவையாறு, அய்யம்பேட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நாகப்பட்டிணம் மாவட்டம் கொள்ளிடம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரிமங்கலம், திருமயம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செய்யூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, பெரம்பலூர் மாவட்டம் வேம்பவார், தழுதலை, பெரம்பலூர், மதுரை மாவட்டம் மேலூர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.