ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை க‌ண்டி‌த்து புது‌ச்சே‌ரி‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் பேர‌ணி

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:08 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌த்து புது‌‌ச்சே‌ரி மாணவ‌ர் நல மு‌ன்ன‌ணி சா‌ர்‌‌பி‌ல் இ‌ன்று க‌ண்டன பேர‌ணி நடைபெ‌ற்றது.

இ‌ந்த பேர‌ணி லா‌ஸ்பே‌ட்டை‌யி‌ல் தொட‌‌ங்‌கி இ‌‌ந்‌திராகா‌ந்‌தி ‌சிலை மு‌ன்பு ‌நிறைவு பெ‌ற்றது.

பேர‌ணி‌யி‌ன்‌ போது, க‌‌ச்ச‌த் ‌தீவை ‌மீ‌‌ட்க வே‌ண்டு‌ம், ‌சி‌றில‌ங்கா‌‌வி‌ற்கு ம‌த்‌திய அரசு இராணுவ உத‌விகளை வழ‌ங்க‌க் கூடாது எ‌ன்று கோஷ‌ங்க‌ள் எழு‌‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்