அரு‌ந்த‌தியரு‌க்கு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்குவது ‌நியாயமானதே: வரதராஜ‌ன்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:50 IST)
அடித்தட்டில் உள்ள அரு‌ந்த‌திய‌ மக்களு‌க்கு 3 ‌விழு‌க்காடு உளஒதுக்கீடு வழங்குவது நியாயமானதே எ‌ன்று‌ம் இதனை அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டும் எ‌ன்று‌ம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக‌த்த‌ி‌ல் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டு உள்ளது. வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது போதாது. சேதத்தின் அளவை ஒப்பிட்டால் அரசு அளிக்கும் இந்த நிவாரண உதவி போதுமானதல்ல. எனவே வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கியுள்ள நிதியை அதிகரிக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

வீடு இழந்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இ‌ந்த நிவாரண உதவிகளையும் அரசு அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவியும், வீடு இழந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் எ‌ன்று வரதராஜ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்‌டா‌ர்.

நெற்பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் எ‌ன்று கூ‌றிய வரதராஜ‌ன், இதேபோல மணிலா, இதர பயிர் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் நிலத்தீர்வையையும் ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் நிவாரணப் பணிகளை தமிழக அரசு அனைத்துக்கட்சி குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும் எ‌ன்று‌ வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்வதற்கு மத்திய அரசு விரைவில் நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் எ‌ன்று‌ம் சென்னை நகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் வசதி கட்டமைப்பை மறு கட்டுமானம் செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

த‌ற்போது பெ‌ய்த மழை நீர் வீணாக கடலில் கலந்து விட்டது. இதனை நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் தொலைநோக்கு திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த வேண்டும் எ‌ன்று வரதராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அருந்ததியருக்கு 3 ‌விழு‌க்காடு உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசை ஜெயலலிதா குறை கூறியுள்ளாரே? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அடித்தட்டில் உள்ள அரு‌ந்த‌திய‌ மக்களு‌க்கு 3 ‌விழு‌க்காடு உள்ஒதுக்கீடு வழங்குவது நியாயமானதே எ‌ன்று‌ம் இதனை அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டும் எ‌ன்றா‌ர்.

தமிழக‌த்த‌ி‌ல் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து மாநில குழுவே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறதே எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அ‌ந்த மாதிரியான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த வரதராஜ‌ன், கட்சியின் மாநிலக் குழு கூட்டம், செயற்குழு கூட்டம் வ‌ரு‌ம் 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றார்.