அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வெள்ள நிவாரண ஆய்வுக் கூட்டம்
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:12 IST)
வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவின் முதல் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
TN.Gov.
TNG
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், தலைமை செயலாளர் உள்பட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் பங்கேற்றனர்
இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசு துறை செயலாளர்களிடம் அவர்கள் துறைகளால் மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, துரிதப்படுத்தி, ஒருங்கிணைத்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.