காணாம‌ல் போன 4 மீனவர்கள் மீட்பு

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:19 IST)
மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ன்ற போது மாயமான நா‌ன்கு ‌மீனவ‌ர்களை இல‌ங்‌கை‌க்கு அருகே உ‌ள்ள ‌தீ‌வி‌ல் ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ட்டன‌ர்.

ராமே‌ஸ்வரத்தில் இருந்து கடந்த மாத‌ம் 29ஆ‌ம் தேதி சு‌ப்‌பிரம‌ணிய‌ன், ராமர், சங்கர், ம‌‌ற்றொரு சங்கர் ஆகியோ‌ர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் 30ஆ‌ம் தேதி கரை திரும்ப வேண்டு‌ம், ஆனா‌ல் இவ‌ர்க‌‌‌ள் கரை‌க்கு ‌திரு‌ம்ப‌வி‌ல்லை. த‌னிடையே '‌நிஷா' எ‌ன்ற புயல் காற்று பலமாக வீசியதா‌ல், அவர்களின் உறவினர்கள் மீன்பிடித்துறையில் புகார் கொடு‌த்தன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து காணாம‌ல் போன ‌மீனவ‌ர்களை தேடு‌ம் ப‌ணி‌யி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ஈடுப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இலங்கைக்கு சொந்தமான பாலத்தீவில் 4 மீனவர்க‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌‌ட்டன‌ர். அவர்களை ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் பத்திரமாக ‌மீ‌ட்டு கரைக்கு கொ‌ண்டு வ‌ந்தன‌ர். புயலால் பல‌த்த சேத‌ம் அடை‌ந்த டகை மீட்கு‌‌ம் முயற்சியி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் ஈடுபட்டு‌ள்ளன‌ர்.

மாயமானது குறித்தும், இலங்கை தீவில் கரை ஒதுங்கியது கு‌றி‌த்து‌ம் ‌மீனவ‌ர்க‌ளிட‌ம் ‌க்யூ பிராஞ் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்