திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையினால் ரூ.151.30 கோடி சேதம் ஏற்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில், மிளகாய், வெங்காயம், பருத்தி, வாழை உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 31,284 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.
திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, துறையூர் தாலுகாக்கள் முழுமையான அளவிலும், திருவெறும்பூர், புல்லம்பாடி, அந்தநல்லூர் தாலுகாக்களில் பகுதி அளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
மழை காரணமாக மாவட்டத்தில் 18 பேர் இறந்து உள்ளனர். 309 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளன. 2,188 வீடுகள் பகுதி பாதிப்பு அடைந்து உள்ளன.
மழை வெள்ள சேதம் மதிப்பு குறித்து தமிழக அரசுக்கு திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம் என்று ஆட்சியர் சவுண்டையா தெரிவித்தார்.