ச‌ட்ட‌க் கல்லூரி‌‌யி‌ல் 10 ஆ‌ம் தே‌தி தே‌ர்வு நட‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (10:58 IST)
ச‌ட்ட‌க் கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை வரும் 10ஆம் தேதி முதல் தொடர்ந்து நடத்த வேண்டுமஎன்று‌ம் அடு‌த்த ஆ‌ண்டு ஜனவ‌ரி 19ஆ‌ம் தே‌தி க‌ல்லூ‌ரியை ‌திற‌க்க வே‌ண்டு‌ம் சென்னை உயர் நீதிமன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கடந்த மாதம் நடந்த பயங்கர மோதலில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை, செ‌ன்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்து நேற்று அளித்த தீர்ப்‌பி‌ன் முழு ‌விவர‌ம்:

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் நுழைவு தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு இடம்தர வேண்டும். மாணவர் விடுதியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இப்போது உள்ள மாணவர் விடுதியை மூடவேண்டும். விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள், வெளியில் தங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகையை அரசு வழங்க வேண்டும்.

ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வை வரும் 10ஆ‌ம் தேதி முதல் நடத்த வேண்டும். ஜனவரி 10ஆ‌ம் தேதிக்குள் தேர்வை முடிக்க வேண்டும். நல்ல கண்காணிப்புடன் தேர்வை நடத்த வேண்டும். தேர்வு சமயத்தில் வெளி ஆட்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது. புதிய நூலகம் உருவாக்க வேண்டும்.

ஜனவரி மாதம் 19ஆ‌ம் தேதி கல்லூரியை திறக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆசிரியர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கல்லூரி முதல்வர் அனுமதி இல்லாமல் வெளி ஆட்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது.

சட்டக் கல்லூரிக்குள் ஜாதி, மத, அரசியல் தொடர்பான எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது. ஜாதி அமைப்பில் மாணவர்கள் சேர தடை விதிக்கப்படுகிறது.

அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சுமூக சூழ்நிலை ஏற்படுத்த மூத்த வழ‌க்‌க‌றிஞ‌ர் ஆர்.காந்தி தலைமையில் 28 வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், கல்லூரியின் நடவடிக்கைகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.
இந்த கமிட்டியில் சட்டக் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டிக்கு தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் எ‌ன்று ‌நீ‌திப‌‌திக‌ள் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்