சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம் மற்றும் அதையொட்டி இருந்த கர்நாடகம் மற்றும் ராயல் சீமாவில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து கிழக்கு அரபிக்கடலில் வலுவிழந்த நிலையில் மெலிந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. அதன் காரணமாக தற்காலிகமாக தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்றார்.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.