மகாமகப் புளுகு புளுகுகிறார் ஜெயலலிதா: கருணாநிதி

சனி, 29 நவம்பர் 2008 (19:01 IST)
"அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசை, "மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று "டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், "கொளுத்துகிறதே வெயில்'' என்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ஆத்திரத்துடன் பேசியவர்கள்; "கொட்டுகிறதே மழை'' என்று ஐந்தாறு நாட்களாய் அதே வானத்தை நோக்கி; வாழ்த்தும் கூறி; அதுவும் இப்போது அளவுக்கு மீறியதால் அதே மக்கள் வான் மீது வசை புராணம் வாசிக்கவும் தொடங்கியுள்ள நிலை தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

கவலை அனைவருக்கும் பொதுவானதாக ஆகி, மழை வெள்ளத்தால் மாண்டோர் தொகை இதுவரை வந்துள்ள தகவல்படி, 103 என்றும், மாண்ட கால்நடைகளின் எண்ணிக்கை 450 என்றும், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50,890 என்றும் ஆகிவிட்டதையெண்ணி வருந்திக் கண்ணீர் வடித்திடவும், 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் பழுதடைந்திருப்பதும்; 328 ஏரிகள் உடைந்து தண்ணீர் வழிந்தோடியிருப்பதும்; 687 பாலங்கள் சேதமடைந்திருப்பதும்; 402 அரசுக் கட்டிடங்கள் சிதிலமடைந்திருப்பதும்;

5 லட்சத்து, 52 ஆயிரத்து 290 எக்டேர் நிலத்தில் பயிர் பச்சைகள் பாழாகி அதனால் சுமார் ஏழு இலட்சம் விவசாயப் பெருங்குடி மக்கள் பரிதவித்து நிற்பதும்; நிராதரவாக மக்கள் நின்றிடக் கூடாது என்பதற்காக நிவாரண உதவிகள் அவர்களுக்கு நிமிட நேரம் கூடத் தாமதிக்காமல் போய்ச் சேர்ந்திட; தமிழக அரசின் தலைமைச் செயலாளரிலிருந்து, மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள் ஆகியவற்றில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வரையில், அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

2,099 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அந்த மையங்களில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 400 பேர் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் நலன் காத்திடவும், துயர் துடைத்திடவும், காவல்துறையினரும் கடமையைக் கண்ணெனக் கருதி, கருணை நெஞ்சத்துடன் பணியாற்றிடுவதில், மேலும் உத்வேகப்படுத்தப்பட்டுள்ளனர். வீடு, உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டு, ஒரே நாளில் 75 இலட்சம் ரூபாய் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு பகுதிக்கென பகிர்ந்து கொண்டு, ஏழை எளிய மக்களின் இன்னல் களைந்திட இடையறாது ஓய்வு உறக்கமின்றி உழைத்திடுகின்றனர். ஆளுங்கட்சியென்பது மட்டுமல்லாமல் மனித நேயங்கொண்ட மற்றக் கட்சியினர் அனைவருமே; மக்களின் துயர் போக்கிடத் துடித்துத் தொண்டு புரிந்து வருகின்றனர். அவர்கள் நன்றிக்குரியவர்கள்.

மழை, வெள்ளம், ஏரி குளங்கள், பாதிப்பு, சாலைகளில் பழுது, நூறு பேருக்கு மேல் உயிரிழப்பு என்ற முழுத் தகவலும் வருவதற்கு முன்பு; அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர உதவிக்காக முதல் கட்டமாக நூறு கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்து, அதனைச் செலவிட வழி வகை கண்டு இழப்புகளுக்கு ஈடுசெய்திட முயற்சி மேற்கொண்டுள்ளோம். முழுத் தேவையென்ன, முழு பாதிப்பு எவ்வளவு என்று கணக்கிட; மத்திய அரசு அனுப்பும் குழுவிடம் முறையிட்டு உதவி பெறவும்; நாமும் கணக்கிட்டு தெரிவிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தோழமைக் கட்சியினரும், தோழமையல்லாத அணியினரும் "மேலும் தீவிரம் தேவை!'', "மேலும் நிவாரண உதவி வேண்டும்'' என்று அதிருப்திக் குரல் கொடுப்பதைக் கூட நமக்கு அவர்கள் வழங்கும் ஆதரவுக் குரலாகவே கருதி; மானசீகமாக நன்றி தெரிவித்தவாறு, அவர்களின் கருத்தையும் செயல்படுத்திட முடிந்த வரையில் முயற்சி மேற்கொள்ள உறுதியெடுத்துக் கொண்டு இன்னும் உழைத்திட ஊக்கம் பெறுகிறோம்.

அத்தகைய நல்ல மனங்களுக்கு மத்தியில் நச்சு நினைவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேண்டுமானால்; "வெந்த புண்ணிலே வேல்'' சொருகும் வேலையிலே ஈடுபட்டு; வெள்ளம் மழையால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர்கள் உள்ளம் குளிர உதவிகள் செய்ய முனைந்து அப்பணியில் இந்த அரசு ஈடுபட்டிருக்கும்போது; வேண்டுமென்றே திட்டமிட்டு நம் மீது பெரும் பழி சுமத்திட "நிவாரணப் பணிகள்'' எதுவுமே செய்யப்படவில்லையென்று நிந்தனை செய்யத் தொடங்கியுள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் நிலை கண்டு, இரக்கமோ, அன்போ, ஆறுதலோ, அதற்கான ஒத்துழைப்போ வழங்கிடும் மனமல்ல ஜெயலலிதாவின் மனம் என்பது நமக்குத் தெரியாமல் இல்லை.

தம்பி முரசொலி மாறனின் உடல்; கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது; இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் தெரியுமே; அடுத்த தெருவில் ஜெயலலிதா வீட்டார் பட்டாசு கொளுத்தி; அது பகல் முழுதும், இரவு முழுதும் வெடித்த சப்தத்தை அவர்கள் எல்லாம் கேட்டார்களே; அது போலத் தான்; இப்போது மழை வெள்ளப் பாதிப்பால் மக்கள், அந்த மக்களின் துயர் துடைத்திட நாம் துடித்துத் தொண்டாற்றும் போது; ஜெயலலிதா மட்டும், அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த அரசை, நம் உள்ளம் பதறிட வார்த்தைகளைப் பட்டாசாக வெடித்து "மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று "டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.