டிச‌ம்ப‌ர் 2ஆ‌‌ம் தே‌தி பிரதமரை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன‌ர் த‌மிழக எம்.பி.க்கள்

வியாழன், 27 நவம்பர் 2008 (12:56 IST)
இலங்கை‌த் தமிழர் பிரச்சனை குறித்து பிதமரைச் சந்திக்க தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் டெல்லி செல்லும் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ஆ‌ம் தேதியன்று பிரதமரை தமிழக நாடாளும‌‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் சந்திப்பார்கள் எ‌ன்று‌ம் முதலமைச்சர் தலைமையில் அனைத்து‌க்கட்சி தலைவர்கள் பிரதமரை டிசம்பர் 4ஆ‌ம் தேதியன்று சந்திப்பார்கள் எ‌ன்று‌ம் த‌‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இலங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சனை தொடர்பாக கடந்த 25ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சட்டமன்ற‌க் கட்சி‌த் தலைவர்கள் கூட்ட‌த்த‌ி‌ல், டிசம்பர் 4ஆ‌ம் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பது எனவும், முன்னதாக தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் நவ‌ம்ப‌ர் 28ஆ‌ம் தேதி பிரதமரை சந்திப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்