தமிழகத்தில் பெய்து வரும் அடைமழைக்கு இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான 'நிஷா' புயல் காரணமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று வரை மழைக்கு 45 பேர் பலியாயினர். இன்றும் மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சைக்கிளில் சென்ற போது மின்சார கம்பி அறுந்து விழுந்து அவர் உயிரிழந்தார்.
மதுராந்தகத்தில் கல்லூரி காவலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு மரம் விழுந்தும், சுவர் இடிந்தும் மின்னல் தாக்கியும் 25 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.