ஒரத்தநாடு, வேதாரண்யத்தில் 33 செ.மீ மழை!
புதன், 26 நவம்பர் 2008 (16:38 IST)
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஒரத்தநாடு, வேதாரண்யத்தில் 33 செ.மீ மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை, சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 28 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தலா 26 செ.மீ மழையும், நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழியில் 25 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு செ.மீட்டரில் வருமாறு: கடலூர் மாவட்டம் பண்ருட்டி 23, சேத்தியாத்தோப்பு, நாகப்பட்டிணம் மாவட்டம் கொள்ளிடம் தலா 21, திருத்துறைப்பூண்டி 20, காரைக்கால் 19, புதுச்சேரி விமான நிலையம் 18, கொடவாசல், நன்னிலம், திருவாரூர் தலா 17.
கும்பகோணம் 16, வலங்கைமான், தரங்கம்பாடி தலா 15, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 14, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மேட்டுப்பட்டி, ராமேஸ்வரம், ஜெயம்கொண்டம் தலா 13, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், அதிராம்பட்டிணம் தலா 12.
சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தலா 11, ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர் தலா 10, சென்னை, காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம், விருத்தாசலம், தஞ்சாவூர் மாவட்டம் மடுக்கூர், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தலா 9, தாம்பரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் தலா 8, செங்கல்பட்டு, பூந்தமல்லி, கொரட்டூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வானூர், விழுப்புரம், மணல்மேல்குடி, அரியலூர் தலா 7.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, செங்குன்றம், கடலூர் மாவட்டம் தொழுதூர், திருவையாறு, பாம்பன், வந்தவாசி தலா 6, மதுராந்தகம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, வெள்ளம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கந்தார்வகோட்டை, அரக்கோணம், திருச்சி மாவட்டம் புல்லம்பாடி, திருச்சி, திருச்சி விமான நிலையம் தலா 5.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், திருத்தணி, திண்டிவனம், கல்லணை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரிமலம், பெருங்கலூர், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, ஆரணி, செய்யூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், லால்குடி, காரைக்குடி, கொடைக்கானல் தலா 4.