சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடைக்கானலில் வீடு இடிந்து விழுந்ததில் சாந்தி, அவரது மகள் மகாலட்சுமி ஆகியோர் பலியாயினர்.
தூத்துக்குடி மாவட்டம், வடக்குகாரசேரியில் சுவர் இடிந்து விழுந்ததில் குமார் என்ற சிறுவனும், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் வீடு இடிந்ததில் அமிர்தமணி என்ற பெண்ணும் உயிர் இழந்தனர்.
அரியலூர் மாவட்டம், கூவத்தூரை சேர்ந்த பெரியநாயகம், அவரது மனைவி அலோஷ்பவமேரி ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து விழுந்து இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், காட்டக்கொட்டாயை சேர்ந்த அண்ணன்- தம்பி வீரமணி, விஜய் ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து பரிதாபமாக இறந்தனர்.
கடலூர் மாவட்டம் திருவந்தபுரத்தில் கழிவுநீர் கலந்த மழை தண்ணீரை குடித்த செண்பகவல்லி என்ற பெண் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பலியானார். கடலூர் சுத்தக்களத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் கால்வாயில் தவறிவிழுந்து இறந்தார். காட்டு மன்னார் கோவிலில் வீட்டு சுவர் இடிந்து ராஜாமணி என்ற பெண் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், வேப்பம்பட்டியை சேர்ந்த ரம்யா என்ற மாணவி ஆற்று தண்ணீர் இழுத்து சென்றதால் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், ராணிபட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைபாண்டுகுடியை சேர்ந்த தங்கம்மாள் என்ற மூதாட்டியும், கீழக்கரை சேரண்பகுதியில் நைனா முகமதுநாச்சியார் என்ற பெண் உயிரிழந்தனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் மழைக்கு பலியானவரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.