த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (17:41 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌த்‌தி‌ன் கடலோர‌ப் பகு‌தி‌க‌ளிலு‌ம் புது‌ச்சே‌ரி‌யிலு‌ம் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வ‌ா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌‌ணி நேர‌த்‌தி‌ல் த‌‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌‌‌ட்டின‌ம், புது‌க்கோ‌‌ட்டை, ராமநாதபுர‌ம் ஆ‌கிய கடலோர மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே பல‌‌த்த மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் செ‌ன்னை‌யி‌ல் வான‌ம் மேகமூ‌ட்ட‌த்துட‌ன் காண‌ப்படு‌‌ம் எ‌ன்று‌ம் ஒரு ‌சில இட‌‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு‌ மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் செ‌ன்னை, ‌திருவ‌ள்ளூ‌ர், கா‌ஞ்‌சிபுர‌ம், கடலூ‌ர், ‌விழு‌ப்புர‌ம், த‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், புது‌க்கோ‌ட்டை, ராமநாதபுர‌ம், தூ‌த்து‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி, க‌ன்‌னியாகும‌ரி ஆ‌கிய கடலோர பகு‌தி‌க‌ளிலு‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் அனை‌த்து பகு‌தி‌‌யிலு‌ம் ‌மிதமானது முத‌ல் பல‌த்த மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்