போர் நிறுத்தம் நடைபெற‌வி‌ல்லையே: கருணாநிதி வேதனை!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:30 IST)
மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மரு‌ந்து வழங்கப்பட்டு வருகின்றன எ‌ன்று கூ‌றிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான் எ‌ன்று வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
இலங்கை இனப் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சட்டமன்ற‌க் கட்சி‌க் தலைவர்கள் கூட்டம் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இன்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார். அ‌ப்போது, இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்‌ ‌பிர‌ச்சனை‌யி‌ல் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம் எ‌ன்று‌ம் மீண்டும் நேரிலும் சந்திக்கவிருக்கிறோம் எ‌ன்றா‌ர்.

இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்று வைகோ பகிரங்கமாக குற்ற‌ம்சா‌ற்‌றி‌யதோடு, ஆயுதங்களையெல்லாம் இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசு தான் நடத்துகிறது என்கிறாரே? எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா.பாண்டியன் மீண்டும் குற்ற‌ம்சா‌ற்‌றியிருக்கிறாரே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, அது தவறான பொய்யான தகவல் எ‌ன்றா‌ர். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று எ‌ன்று மேலு‌ம் கூ‌றினா‌ர்.

த‌மிழக‌த்த‌ி‌ல் இரு‌ந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் முறையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வந்து‌ள்ளதே? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, இன்று காலையில் கூட முறையாக வழங்கப்படுவதாக செய்தி வந்தது. ஆனால் தவறு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது சரியல்ல எ‌‌ன்றா‌ர்.

அயலுறவுத்துறை அமைச்சர் இதற்காகவே தங்களைச் சந்திக்க வந்த போது சில உறுதிமொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எ‌ன்று கே‌ட்டபோது, மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன எ‌ன்று கூ‌றிய கருணா‌நி‌தி, பட்டினி கிடக்கின்ற தமிழக மக்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்ற சாதனங்கள் எல்லாம் தங்கு தடை இல்லாமல் மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான் எ‌ன்றா‌ர்.

இலங்கையிலே த‌ற்போது அதிபராக உள்ள ராஜப‌க்சே இருக்கிற வரை இலங்கை பிரச்சனை தீராது என்று சொல்வதைப்பற்றி? கே‌ட்டத‌ற்கு, அது நம்முடைய ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடைய ஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது எ‌ன்றா‌ர்.

இலங்கையிலே தனிநாடு உருவாவதற்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? எ‌ன்று ச‌ெ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டபோது, அதையெல்லாம் நான் ூகித்துச் சொல்ல முடியாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.