சென்னையில் கரும்பு விவசாயிகள் நாளை பேரணி!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (11:14 IST)
கரு‌ம்பு‌க்கட‌ன்னு‌க்கூ.2 ஆ‌யிர‌மவழ‌ங்கோ‌ரி சென்னையில் நாளை கரும்பு விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்‌ப்பாட்டத்தில் ஈடுபடு‌கி‌ன்றன‌ர். இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌த்த‌ி‌லஈரோடு கரும்பு விவசாயிகள் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஆர்‌ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி இறுதியில் கரும்பு வெட்டு நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிங்கள் சங்கம் சார்பாக நாளை (26ஆ‌மதே‌தி) காலை 10 மணிக்கு சென்னை மன்றோ சிலையில் இருந்து தலைமை‌சசெயலக‌மவரை கரும்பு விவசாயிகள் பேரணியும், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்‌ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த பேரணி மற்றும் ஆர்‌ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் விவசாயிகள் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தலைவர் கே.கே.சின்னதம்பி செ‌‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்