பலத்த மழை : தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (00:23 IST)
வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவையில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கை கடற்கரையில் இருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.