த‌மிழக‌த்த‌ி‌ல் மேலும் மழை நீடிக்கும்: வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம்!

திங்கள், 24 நவம்பர் 2008 (17:50 IST)
குமரி முனையில் இருந்து தமிழக கடலோரத்தில் இலங்கையின் குறுக்கே காற்றழுத்த தாழ்வு நிலை நீடி‌ப்பதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் மழை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய இயக்குனர் ரமணன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வங்க‌க் கடலில் தமிழ்நாடு, ஆந்திரா கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது 3 நாட்களுக்கு பிறகு தற்போது லேசாக நகர்ந்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌த்தா‌ர் ரமண‌ன்.

குமரி முனையில் இருந்து தமிழக கடலோரத்தில் இலங்கையின் குறுக்கே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது எ‌ன்று‌ம் இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் பல‌த்த மழை வரை பெய்யும் எ‌ன்று‌ம் உள் மாவட்டங்களில் அனேக பகுதிகளிலும் கன மழை பெய்யும் எ‌ன்று ரமண‌ன் கூ‌றினா‌ர்.

மேலு‌ம் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எ‌ன்று ரமண‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்