வங்க கடலில் இலங்கை கடற்கரையில் இருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக கடலோர பகுதியான ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன், தனுஷ்கோடி கடல் பகுதியில் தொடர்ந்து கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் சாலை வரை கடல் நீர் வந்து செல்கிறது.
இதன் காரணமாக தனுஷ்கோடிக்கு பக்தர்களை ஏற்றி செல்லும் வேன், பேருந்துகள் செல்ல முடியவில்லை. கடலில் அலை அதிகம் இருந்ததால் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், கோடியக்கரை பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகுகளை அலைகள் இழுத்து சென்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.