‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டது!

சனி, 22 நவம்பர் 2008 (23:49 IST)
சி‌றில‌ங்க கட‌ற்படை‌யினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு இல‌ங்கை ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 22 ‌த‌மிழக மீன‌வ‌ர்க‌ள் ஓ‌ரிரு நா‌ட்க‌ளி‌ல் ‌‌‌விடு‌வி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று ம‌த்‌திய அரசு உறு‌திய‌ளி‌த்ததையடு‌த்து, ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் கை‌விட‌ப்ப‌ட்டது.

க‌ட‌ந்த 17 ஆ‌ம் தே‌தி புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் ஜெகதாப‌ட்டின‌த்‌தி‌ல் இரு‌ந்து கட‌லி‌ற்கு ‌மீ‌ன் ‌பி‌டி‌க்க‌ச் செ‌ன்ற ‌மீன‌வ‌ர்களை எ‌ல்லை‌த் தா‌ண்டி ‌மீ‌ன் ‌பிடி‌த்ததாக ‌சி‌றில‌ங்க கட‌ற்படை கைது செ‌ய்து யா‌ழ்‌ப்பாண‌ம் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இதனை‌த் தொட‌ர்‌ந்து ஜெகதாப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌‌ம் அற‌ி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மே‌ற்கொ‌ண்ட நடி‌வடி‌க்கையடு‌த்து, கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் ஓ‌ரிரு நா‌ட்க‌ளி‌ல் ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌த்‌திய அரசு உறு‌திய‌ளி‌த்தது.

இதனையடு‌த்து கட‌ந்த 3 நா‌ட்களாக வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டுவ‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்தை கை‌வி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்