அரசே மதுபானக் கடைகளை நடத்துவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. குடிக்காதவர்களையும் குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கும் நிலை உள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பெண்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் அவலநிலை உருவாகி உள்ளது.
எனவே பூரண மது விலக்கு கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும். வருகிற ஜனவரி மாதத்திற்குள் அனைத்து மதுக் கடைகளையும் மூடாவிட்டால் எல்லா அமைப்பினரும் இணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
குடியில் இருந்து விடுபடுபவர்களுக்கும், கள்ளச் சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கும் சுய தொழில் செய்ய அரசு உதவ வேண்டும்.
பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் குடித்து விட்டு வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மதுரை ஆதினம், பேராயர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட விழிப்புணர்வு கழகத் தலைவர் பி.டி.அரசக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.