‌வீ‌ண் ப‌ழி சும‌த்த வே‌ண்டா‌ம் : கருணா‌நி‌தி‌க்கு கலா‌நி‌தி மாற‌ன் ப‌தி‌ல்!

சனி, 22 நவம்பர் 2008 (04:58 IST)
திமுக, தமிழக அரசு, மற்றும் தனது குடும்பத்துக்கு எதிராகச் செயல்படுவதாக மாறன் சகோதரர்கள் ‌மீது முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம் சா‌ற்‌றி‌யிரு‌ந்தத‌ற்கு, எங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டாம் என்று சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த தயா‌‌நி‌தி மாற‌ன், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் அமைதி காத்து வந்தோம். இப்போது எங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. அதனால் முதல்வரும், எங்கள் தாத்தாவுமான கருணாநிதிக்கு எனது அண்ணன் கலாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். அதில் எல்லாவற்றுக்கும் விளக்கம் உள்ளது.

செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ன் கே‌ள்‌விகளு‌க்கு ப‌தில‌ளி‌க்க மறு‌த்த தயா‌நி‌தி மாற‌ன், அனைத்துக் கேள்விகளுக்கும் கடிதத்தில் பதில் இருப்பதாகக் கூறிவிட்டு‌ச் செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

கலாநிதி மாறன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கடித‌த்‌தி‌ன் ‌விவர‌ம் வருமாறு :

"அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றால் கூட பொறுத்துக் கொண்டிருப்போம். ஆனால் சில சுயநலமிகள் கொடுத்த தவறான தகவல்களை நம்பி தனிப்பட்ட முறையில் எங்களது நன்றியுணர்வு, நாணயம், நேர்மை பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்திருப்பதால் விளக்கம் தர வேண்டியுள்ளது. யாரோ சிலரைத் திருப்திப்படுத்தவே இந்தக் கடிதத்தை எழுதியிருப்பீர்கள் என்பதை அறிவோம்.

முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு அவரது அடியொற்றி திமுகவுக்கும், நம் குடும்பத்துக்கும் விசுவாசிகளாக நடந்து வந்துள்ளோம்.

இரு குடும்பங்களுக்கும் சேர வேண்டிய தொகையை -நான் எவ்வளவோ சொல்லியும் -நீங்கள்தான் பங்கீடு செய்யச் சொன்னீர்கள். தங்கள் குடும்பத்துக்கான பங்கினை அதிகப்படுத்தி "ரவுண்டாக' கேட்டபோது எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்தோம்.

தினகரனை வாங்கக் கட்டளை : இதற்குப் பிறகு ஓராண்டுக்கும் மேலாக நமது உறவுகள் சுமுகமாகவே சென்றன. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்துப் பத்திரிகைகளும் திமுகவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டன. அதனால் உங்களது கட்டளையை ஏற்று, நஷ்டம் ஏற்படும் என்ற நிலையிலும் "தினகரன்' நாளிதழை வாங்கி நடத்தினோம்.


சிறப்பாகப் பணியாற்றும் மத்திய அமைச்சர் என்று தயாநிதி மாறனை "தினகரன்' மட்டுமல்ல பல்வேறு பத்திரிகைகளும் கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அதனைத் தமிழாக்கம் செய்து முரசொலியில் முதல் பக்கத்தில் நீங்கள் வெளியிடச் செய்தீர்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பு முரசொலியில் வெளிவந்தபோது தவறாகவோ, கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் என்றோ தங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அதுபோன்ற கருத்துக் கணிப்பை "தினகரன்' வெளியிட்டபோது அதற்குச் சாயங்கள் பூசப்பட்டு எங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.

திமுகவுக்காகப் பல ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் சுற்றிப் பணியாற்றி "மிசா' கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே (மு.க. ஸ்டாலின்) அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று நீங்கள் மகிழ்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால் அதனைப் பெரிய பாதகச் செயலாக ஏன் எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரியவில்லை.

"தினகரன்' வெளியிட்ட கருத்துக் கணிப்புக்காக தயாநிதி மாறனுக்கு தண்டனை வழங்கப்பட்து எந்த விதத்தில் நியாயம் என்பதைக் கோபத்தைத் துறந்து சிந்திக்க வேண்டுகிறோம். வேறு யாரையாவது தயாநிதியின் இடத்துக்குக் கொண்டு வரும் எண்ணமிருந்தால் தானாகவே அவர் ராஜிநாமா செய்திருப்பார்.

அதனைச் செய்யாமல் அவரைப் பெரிய குற்றவாளியாக சிருஷ்டித்து அவரிடம் கருத்துக் கேட்காமலேயே நடவடிக்கை எடுத்தீர்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் வெளியிட்ட அறிக்கையில் தங்களின் முடிவை ஏற்பதாகக் கண்ணியமாக அறிவித்தார். அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களை அழித்தொழிக்க பல்முனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அண்ணா அறிவாலயத்திலிருந்து சன் டிவி அலுவலகத்தை காலி செய்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உள் அலங்காரத்தை அப்படியே விட்டுவிட்டுதான் வந்தோம்; அதற்கான புகைப்பட ஆதாரம் எங்களிடம் உள்ளது.

கலைஞர் டிவிக்காக மாற்றம் செய்து இடிக்கப்பட்ட புகைப்படங்களைத் தங்களிடம் காட்டி தந்திரமாக எங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்று கலாநிதி மாறன் தனது கடித‌த்‌தி‌ல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்