இந்தியா - சிறிலங்கா கூட்டுக் குழு ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால் மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
பின்னர் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தங்கபாலு கூறுகையில், இந்தியா - சிறிலங்கா கூட்டுக் குழு ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால் மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதன் பிறகு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அறிக்கை வாசகங்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தங்கபாலு தெரிவித்தார்.