தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் : தமிழகத்திற்கு ரூ.44 கோடி!
புதன், 19 நவம்பர் 2008 (23:57 IST)
தமிழ்நாட்டில் 2008-09 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களுக்கு ரூ.44 கோடியே 62 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.