சட்டக்கல்லூரி முதல்வர் அறையில் தாக்குதல் : 14 மாணவர்கள் கைது!

புதன், 19 நவம்பர் 2008 (17:52 IST)
சென்னை அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் மாணவ‌ர்க‌ளிடையே மோத‌ல் நட‌ந்த மறுநா‌ள் க‌ல்லூ‌‌ரி முத‌ல்வ‌ர் அறை‌க்கு‌ள் புகு‌ந்து அ‌ங்‌கிரு‌ந்த பொரு‌ட்களை சேத‌ப்படு‌த்‌திய 14 மாணவ‌ர்க‌ளை காவ‌ல்துறை‌யின‌ர் கைது ச‌ெ‌ய்து‌ள்ளன‌ர்.

சென்னை அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் கட‌ந்த 12ஆ‌ம் தே‌தி இரு ‌பி‌ரிவு மாணவ‌ர்க‌ளிடையே நட‌ந்த மோத‌லி‌ல் 3 மாணவர்கள் படுகாயமடை‌ந்து மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வன்முறதாக்குதல் நடந்த மறுநாள் கல்லூரி முதல்வர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மேஜை, நாற்காலி, தொலைபே‌சி உ‌ள்பட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக 14 மாணவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து அவ‌ர்க‌ள் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

இதற்கிடையே, சட்டக் கல்லூரியின் புதிய முதல்வராக முகமது இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை சட்டக் கல்லூரி முதல்வராக ப‌‌ணியா‌‌ற்‌றி வ‌ந்தவ‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்