இலங்கை நிவாரண நிதி ரூ.25 கோடியை எட்டியது : தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டுகோள்!
புதன், 19 நவம்பர் 2008 (17:36 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்காக திரட்டப்பட்டு வந்த நிவாரண நிதி முதல்வர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்வது இன்றுடன் முடித்துக் கொள்ளப்படுவதாகவும், இன்னும் யாராவது நிதி அளிக்க விரும்பினால் இனிமேல் அதனை நேரடியாக தலைமைச் செயலர் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் திங்கள் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு இலங்கைத் தமிழர் நிவாரண நிதி இந்த 23 நாட்களில் ரூ.24 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 939 குவிந்தது.
இந்த நிலையில் அன்றாடம் முதல்வர் அலுவலகத்தில் நிதி பெற்றுக் கொள்வது இன்றுடன் முடித்துக் கொள்ளப்படுகிறது.
இன்னும் யாராவது நிதி அளிக்க விரும்பினால் இனிமேல் அதனை நேரடியாக தலைமைச் செயலர் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.