சென்னை - பெங்களூருக்கு 'ஏழைகள் ரதம்' சிறப்பு ரயில்!

புதன், 19 நவம்பர் 2008 (10:58 IST)
பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்ட ‌நெ‌ரிசலை சமா‌ளி‌க்க சென்னை சென்‌ட‌்ரல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து பெங்களூருக்கு ஏழைகள் ரதம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல், "சாதாரண மக்களும் கு‌ளி‌ர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில், 'ஏழைகள் ரதம்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலின் அனைத்துப் பெட்டிகளும் கு‌ளி‌ர்சாதன வசதி செய்யப்படும்.

தற்போது பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டரல் - பெங்களூர் மார்க்கத்தில் இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

சென்னை செ‌ன்‌ட்ர‌லி‌ல் இரு‌ந்து பெ‌ங்களூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்‌பு ர‌யி‌ல் (எ‌ண் 0687), சென்ட்ரலில் இருந்து நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.55 ம‌ணிக்கு பெங்களூர் சென்று சேரும்.

பெங்களூ‌ரி‌ல் இரு‌ந்தஇய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்‌பர‌யி‌ல் (எ‌ண் 0688), பெங்களூரில் இருந்து நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்களி‌ல் பயண‌ம் செ‌ய்ய இ‌ன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ல் வெளியிட‌ப்ப‌ட்டு‌ள்ள ம‌ற்றொரு செய்திக்குறிப்‌பி‌ல், "மதுரை‌யி‌ல் இரு‌ந்து சென்னை எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (எ‌ண் 0626), மதுரையில் இருந்து நவ. 23ஆ‌ம் தேதி இரவு 11.55 ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்