நவ.25 முழு அடைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஜி.கே.மணி!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (09:58 IST)
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி முழு அடை‌ப்பு நட‌த்த அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌த்‌தி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடிவை மறுப‌ரி‌‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ‌ஜி.கே. ம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌ம் முடி‌ந்தது‌ம் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டிய‌ளி‌த்த அவ‌ர், "இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வ‌லியுறு‌த்‌தி‌ சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

இதிலகலந்து கொண்டு, கருத்துக்களை வலியுறுத்தினேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, மீண்டும் ஒரு முறை முத‌ல்வ‌ர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும்.

இதில், அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் ஐ.நா.குழுவின் உதவியை தேவைப்பட்டால் மத்திய அரசு நாடவேண்டும்.

இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான, தமிழகத்தில் 25ஆ‌ம் தேதி முழு அடைப்பு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எ‌ன்று ஜி.கே.மணி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்