போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி த.தொ.‌வின‌ர் கவன‌யீ‌ர்‌‌ப்பு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (04:22 IST)
சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் செ‌ன்னை‌யி‌ல் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும், மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

இக்கவனயீர்ப்பு நிகழ்வு சென்னை தகவ‌‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப பூ‌ங்கா டைட‌ல் பா‌ர்‌க் வளாக‌ம் மு‌ன்பாக ‌‌தி‌ங்க‌ட்‌கிழமை மாலை 4 மணி முத‌ல் 5 மணிவரை நடைபெற்றது.

இதில் நடிகர் சூர்யா, அவருடைய தம்பி கார்த்தி உள்ளிட்ட பெருமளவிலான பொறியிலாளர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் “போரை நிறுத்து” என பொறிக்கப்பட்ட டீ ச‌ர்ட்டுக்களை அணிந்து நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர் சாலை‌யி‌ல் கைகோர்த்த வண்ணம் நின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்