‌நியாய‌விலை கடைக‌ள் மூல‌ம் கா‌‌ய்க‌றி வழ‌ங்க வேண்டும் : ஜி.கே.மணி!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (15:24 IST)
கா‌ய்க‌றிக‌ளி‌ன் ‌விலஅ‌திக‌ரி‌த்து‌ககொ‌ண்டபோவதா‌ல் ‌நியாய‌விலகடைக‌ளமூல‌மகா‌ய்க‌றி உ‌ள்பஅனை‌த்து‌பபொரு‌ட்களை‌யு‌மஅட‌க்க ‌விலை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றச‌ட்ட‌ப்பேரைவை‌யி‌லா.ம.க. உறு‌ப்‌பின‌ர் ‌ி.‌ே. ம‌ணி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌‌ர்.

சட்டசபையில் இ‌ன்றதுணை ம‌தி‌ப்‌பீடமீதான விவாதத்தில் பே‌சிஜி.கே.மணி, "தமிழ்நாட்டில் அரிசி, உணவுப் பொருட்கள், காய்கறி, மணல், சிமெண்ட் என அனை‌த்து‌பபொருட்களின் விலைகளு‌மதாறுமாறாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்த்தியதை வரவேற்கிறோம். ஆனால் உழைக்கும் மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வழி உள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். காய்கறிகளை நியாய விலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். காய்கறி மட்டுமல்ல அனை‌த்து‌பபொருட்களையும் அடக்க விலையில் கொடுங்கள்" எ‌ன்றகூ‌றினா‌ர்.

"பெரும் தொழில்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் காணாமல் போய்விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை எத்தனை தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அரசு அறிவிக்க வேண்டும்.

அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மது ஒழிக்கப்பட வேண்டும். உயிரையும், நாட்டையும், வீட்டையும் அழிக்கக் கூடிய மதுவை ஏன் விற்க வேண்டும். காந்தி, அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் வெறுத்த மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும். பா.ம.க. நடத்திய மது ஒழிப்பு மாநாட்டிற்கு பெண்கள் பெரும் ஆதரவு தந்துள்ளனர்.

கங்கை நதியை தேசிய நதியாக ஆக்கியதுபோல காவிரி, பாலாறு, பெரியார் நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு மிக அதிகமாக உள்ளது. மது, சட்டம்ஒழுங்கு, நில அபகரிப்பகட்டுபடுத்தாவிட்டால் தேர்தலில் இந்த ஆட்சிக்கு எதிர்மறையான நிலைதான் ஏற்படும்" எ‌னறு பே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்