மின்வெட்டை கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (12:20 IST)
மின்வெட்டை கண்டித்து ஓசூ‌ரி‌ல் வரு‌ம் 16ஆ‌ம் த‌ே‌தி அ.இ.அ‌.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுற‌ி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓசூர் நகரத்தில் கடுமையான, மின்வெட்டு நிலவுகிறது. தண்ணீர் பற்றாக் குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓசூர் நகரத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

தொழிற்சாலைகளை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, ஊதிய இழப்பு, ஆகியவை ஏற்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்ததன் காரணமாக அரசின் வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வேளாண் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

மாணவ, மாணவியர், நோயாளிகள், முதியவர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் 16ஆ‌ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் ஓசூர் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்