வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் மிதமானது முதல் கனத்த மழை வரை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.