வாணியம்பாடியில் அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம் : ஜெயலலிதா அறிவிப்பு!

வியாழன், 13 நவம்பர் 2008 (13:51 IST)
வா‌ணி‌ய‌ம்பாடி‌யி‌ல் த‌ற்போது‌ள்ள பேரு‌ந்து ‌நிலைய‌த்தை இட‌ம் மா‌ற்ற‌ம் செ‌ய்யு‌ம் நடவடி‌க்கை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது குற‌ி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அரசுக்குச் சொந்தமான நிலம் இருந்த போதும், சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குப் பேருந்து நிலையத்தை மாற்ற இந்த ஆண்டு துவக்கத்தில் தி.மு.க.அரசு முயன்ற போது, அதைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் விளைவாக, திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

இந் நிலையில், கடந்த 29.9.2008 அன்று நடைபெற்ற வாணியம்பாடி நகர மன்ற அவசரக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, தற்போதுள்ள பேருந்து நிலையத்தை மாற்ற ஏதுவாக 4 கிலோ மீட்டர் தொலைவில் நிலம் வாங்குவது குறித்த தீர்மானம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அந்த இடம் வாங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இது போன்ற மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் மேற்கு மாவட்ட அ.இ.அ.‌தி.மு.க. சார்பில், வரு‌ம் 15ஆ‌ம் தேதி (சனிக்கிழமை) வாணியம்பாடி நகர பேருந்து நிலையம் எதிரில், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்