சென்னை‌யி‌ல் 10 மாடி‌யி‌ல் புதிய மரு‌த்துவமனை : அமைச்சர் தகவ‌ல்!

வியாழன், 13 நவம்பர் 2008 (13:17 IST)
சென்னை மத்திய சிறை இருந்த இடத்தில் 10 மாடியில் பு‌திய மரு‌த்துவமனகட்டடம் கட்ட முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி அனுமதி அளித்துள்ளதாக த‌மிழக சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌ர்.கே. ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கேள்வி நேரத்தின் போது உறு‌ப்ப‌னி‌ர்க‌ள் கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல் இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதற்காக 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு‌ள்ளதாக கூ‌றிய அவ‌ர், இங்கு பல்வேறு சிறப்பு பிரிவு வார்டுகள் துவக்கப்படும் எ‌ன்று‌ம் நாங்குனேரி அரசு மருத்துவ மனைக்கு கட்டடம் கட்ட ரூ.2.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நட‌ந்து வருவதாகவு‌ம் கூ‌றினா‌ர்.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 40 ‌விழு‌க்காடு மரு‌த்துவ‌ர் பணியிடம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாக தெ‌ரிவ‌ி‌த்த அவ‌ர், தற்போது 350 காலி இடம் தான் நிரப்பப்படாமல் உள்ளது எ‌ன்று‌ம் 15 நாட்களில் அனை‌த்து மரு‌த்துவ‌ர் பணியிடமும் நிரப்பப்பட்டு விடும் எ‌ன்று‌ம் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

மதுராந்தகம் அரசு மரு‌த்துவமனை‌க்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த அரசு பரிசீலிக்கும் எ‌ன்று‌ம் அமை‌‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்