அரசு அலுவலர்க‌ள், ஆசிரியர்களு‌க்கு அகவிலைப்படி 7 ‌விழு‌க்காடு உயர்வு!

வியாழன், 13 நவம்பர் 2008 (12:42 IST)
தமிழ்நாடு அரசு அலுவலர்க‌ள், ஆசிரியர்க‌ள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவ‌ர்களு‌க்கான அகவிலைப்படியை 7 ‌விழு‌க்காடு உயர்த்தி முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது குற‌ி‌த்து தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "மத்திய அரசஅலுவலர்களுக்கு அகவிலைப்படியை 1.7.2008 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படியை 1.7.2008 முதல் 7 ‌விழு‌க்காடு உயர்த்தி முத‌ல்வ‌ர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1.7.2008 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு 953 கோடி ரூபாய் செலவாகும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்