இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு திரட்டப்பட்டு வரும் நிவாரண நிதி இதுவரை 7 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 701 ரூபாய் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளையேற்று இன்று தமிழகக் காவல்துறை சார்பில் 64,22,601ம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சார்பில் ரூ.32,00,000ம், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.55,79,008ம், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ரூ.1,00,000 உள்பட இதுவரை மொத்தம் 7 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 701 ரூபாய் நிதி குவிந்துள்ளது.