அரு‌ந்த‌தியரு‌க்கு இடஒது‌க்‌கீடு : கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் ஆலோசனை!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (16:26 IST)
அரு‌ந்த‌‌தியரு‌க்கு த‌னி இடஒது‌க்‌கீடு வழ‌ங்குவது கு‌றி‌த்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று கல‌ந்தாலோசனை‌க் கூ‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌நீ‌தியரச‌‌ர் எ‌ம்.எ‌ஸ். ஜனா‌ர்‌த்தன‌ம், ஊரக வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் மு.க. ‌ஸ்டா‌லி‌ன், பொது‌ப்ப‌ணி ம‌ற்று‌ம் ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன், ஆ‌தி‌திரா‌விட‌ர் நல‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ. ‌த‌மிழர‌சி ஆ‌கியோ‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

மேலு‌ம், தலமை‌ச் செயல‌ர் கே.எ‌ஸ். ஸ்ரீப‌தி, ஆ‌தி‌‌திரா‌விட‌‌ர் ம‌ற்று‌ம் பழ‌ங்குடி‌யின‌ர் நல‌த்துறை‌ச் செயலர் ‌வி. கனகரா‌‌ஜ், ச‌ட்ட‌த்துறை செயல‌ர் எ‌ஸ். ‌தீனதயா‌ள‌ன் ஆ‌‌கியோரு‌ம் ப‌ங்கே‌ற்றன‌ர் எ‌ன்று த‌மிழக அரசு ‌வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்