கருணாநிதியிடம் ரூ.56 ல‌ட்ச‌ம் வழ‌ங்‌கினா‌ர் சர‌த்குமா‌ர்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:17 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக தெ‌ன்‌னி‌ந்‌திய நடிக‌ர் ச‌ங்க‌ம் சா‌ர்‌பி‌ல் ‌‌திர‌ட்ட‌ப்ப‌ட்ட ‌நிவாரண உத‌வி‌த் தொகையான ரூ.56 ல‌ட்ச‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் நடிக‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌‌ர் வழ‌ங்‌கினா‌ர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்கள் மீது நட‌த்த‌ி வரு‌ம் தாக்குத‌ல்களா‌ல் வீடுகளையும், பொருட்களையும் இழந்து பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உதவ தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது.

நடிகர் சங்கம் சா‌ர்‌பி‌ல் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய போது ரூ.55 லட்சத்து 79 ஆயிரத்து 8 ரூபாய் வசூலானது. இந்த நிதிக்கான காசோலையை நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் இன்று காலை கோபாலபுர‌த்த‌ி‌ல் உ‌ள்ள இ‌ல்ல‌த்த‌ி‌ல் முதலமைச்சர் கருணாநிதியை நேரில் ச‌ந்‌‌தி‌‌த்து வழங்கினார்.

அ‌ப்போது, நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை மற்றும் மனோரமா, சார்லி, ஸ்ரீப்ரியா, கே.ராஜன், அலெக்ஸ், சத்யப்ரியா, ரித்தீஷ் ஆகியோ‌ர் உட‌ன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்