இலங்கைத் தமிழர் பிரச்சனை: டி.வி. நடிகர், நடிகைகள் 9ஆம் தேதி உண்ணாவிரதம்!
செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:16 IST)
இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நவம்பர் 9ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று டி.வி. நடிகர் சங்க தலைவர் வசந்த் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தில் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலிகிராமத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் நாளை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.