சென்னையி‌லிருந்து நாகர்கோவி‌லு‌க்கு ‌சிறப்பு ரயில்!

சனி, 1 நவம்பர் 2008 (05:33 IST)
சென்னையில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண்.0659) எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

அதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0611) எழும்பூரில் இருந்து இரவு 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நாளை (2ஆ‌ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0612) நாகர்கோவிலில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னையை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (2ஆ‌ம் தேதி) இரவு 8.25 மணிக்கு நாகர்கோவிலுக்கும் (0637), நாகர்கோவிலில் இருந்து 3ஆ‌ம் தேதி இரவு 8.10 மணிக்கு சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை, வள்ளிïர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

வெப்துனியாவைப் படிக்கவும்