மனித சங்கிலிக்கு வந்து ‌ப‌லியானவ‌ர் குடு‌ம்ப‌த்‌‌து‌க்கு கருணாநிதி நிதியுதவி!

சனி, 25 அக்டோபர் 2008 (16:29 IST)
மனித சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அய்யப்பன் குடும்பத்திற்கு ‌தி.மு.க.சா‌ர்‌பி‌ல் ரூ.50,000 ந‌ி‌தியுத‌வி வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

இது தொட‌ர்பாக தி.மு.க தலைமை‌க் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண மத்திய அரசை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி அணி வகுப்பில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அய்யப்பன் குடும்பத்திற்கு உதவி நிதியாக ரூபாய் 50 ஆயிரமும்.

காயமடைந்த வி.புதுப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன், கிளாம்பாக்கத்தை சேர்ந்த அய்யனாரப்பன், மண்ணாங்கட்டி, தட்சிணாமூர்த்தி, காசிநாதன் ஆகியோரு‌க்கு தலா ரூ.5 ஆயிரமும் மொத்தம் ரூ.80 ஆயிரத்தை தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் தலைவர் கருணா‌நி‌தி இன்று வழங்கினார்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்