கொடு‌ங்கையூ‌ரி‌ல் பு‌திய ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌சிலை : கே.வீ. தங்கபாலு!

சனி, 25 அக்டோபர் 2008 (14:10 IST)
கொடுங்கையூரில் ராஜீவ்காந்தி சிலை இருந்த அதே இடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய சிலை அமைக்கப்படும் எ‌ன்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.வீ. தங்கபாலு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறி‌க்கை‌யி‌ல், "கொடுங்கையூர், சின்னாண்டி மடத்திலிருந்த ராஜீவ்காந்தி திருவுருவச்சிலை உடைத்து சிதைக்கப்பட்ட கொடிய சம்பவத்திற்கு தமிழகமெங்கும் பொதுமக்கள் மற்றும் காங்கிரசாரின் மனக்கொதிப்பால் எதிர்ப்பும், கண்டனமும் தீவிரமாகி வருகின்றன.

இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் வழியில் அவர்களுக்கு உரிய தண்டனையை காவல்துறை பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி திருவுருவச்சிலை இருந்த அதே இடத்தில் அவரது புதிய சிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்படும்" எ‌ன்று தங்கபாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்